search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் காயம்"

    • தொலை தூரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம்.
    • 14 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிற்பகலில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தொலை தூரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று தேர்வுக்காக வளாகத்தில் உள்ள மரத்தடியில் மாணவ-மாணவிகள் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் பலத்த காற்று வீசியது. மரக்கிளைகள் காய்ந்திருந்ததால் காற்றில் பலமாக ஆடியது.

    இதில் எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து படித்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது விழுந்தது. இதில் அவர்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்டனர். மாணவிகள் விஜயா, விஷாலினி, மதுஸ்ரீ, இலக்கியா உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர். இதில் 14 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.
    • விபத்தில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி சார்பாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் தினமும் மாணவ-மாணவிகள் சென்று வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 கல்லூரி மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமான மாணவ, மாணவிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
    • இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குன்றத்தூரை அடுத்த கோவூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் உள்ள யூ.கே.ஜி. வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் 5 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தெரிகிறது.

    மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • சிவகங்கை அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதி 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    தேவகோட்டை

    சிவகங்கையில் செயல் பட்டு வரும் தனியார் பள்ளியில் சிவகங்கை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை தாயமங்கலத்தில் இருந்து பள்ளி வாகனம் வந்துள்ளது.

    இந்த வாகனம் தாயமங்கலம், சாத்திரசன்கோட்டை பகுதியில் 22 மாணவ-மா ணவிகளை ஏற்றிக்கொண்டு வேலாங்குளம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வேலான்குளம் கிராமத்தினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், மேலும் 10 பேர் சாத்திரசன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். சிவகங்கை தாலுகா போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பள்ளி வாகனம் தாமதமாக வந்ததாகவும், ஓட்டுநர் வேகமாக இயக்கியதும், பள்ளி வாகனத்தில் உதவியாளர் யாரும் இல்லாததும், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது.
    • பஸ்சில் வந்த மாணவர்களில் 3 பேர் லேசான காயமடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளை வாகனங்கள் ஏற்றி சென்று வருவது வழக்கம்.

    அதேபோல் இன்று காலை ராஜகோபாலபுரம் பகுதி வரை சென்ற ஒரு தனியார் பள்ளி பஸ் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக் கொண்டு மன்னார்குடி நோக்கி வந்தது. அப்போது ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது. இதனால் பஸ்சில் வந்த மாணவர்களில் 3 பேர் லேசான காயமடைந்தனர்.

    மற்றவர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்த மாணவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

    விபத்து பற்றி அறிந்தும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதிக்கு வந்து பார்க்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த தலையாமங்கலம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • குடி போதையில் இருந்த டிரைவருக்கு தர்ம அடி
    • பெற்றோர்கள் அச்சம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் ராஜன் தெருவில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது.

    இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை வழக்கமாக ஆட்டோவில் அழைத்து வருவது வழக்கம் அதன்படி நேற்று பள்ளி முடிந்தவுடன் திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்த பஷீர் (வயது 30).

    பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு பெரியகடை தெருவுக்கு வந்தார். எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை வளைத்த போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    ஆட்டோவில் பயணம் செய்த திருப்பத்தூர் வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆட்டோவில் சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்டனர்.

    ஆட்டோவை ஓட்டி வந்த பஷீர் குடிபோதையில் இருந்ததாக கூறி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக பஷீர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ -மாணவிகளைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×